மாவோயிஸ்ட் தாக்குதலில் உயிரிழந்த வீரர்களின் குடும்பங்களுக்கு தலா ஒரு கோடி ரூபாய் நிதியுதவி

சத்தீஸ்கர் மாநிலம் சுக்மாவில் மாவோயிஸ்ட்கள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் உயிரிழந்த மத்தியப்பிரதேசத்தை சேர்ந்த இரு வீரர்களின் குடும்பத்திற்கு தலா ஒரு கோடி ரூபாய் நிதியுதவி அறிவிக்கப்பட்டுள்ளது. #NaxalAttack #Chhattisgarh
மாவோயிஸ்ட் தாக்குதலில் உயிரிழந்த வீரர்களின் குடும்பங்களுக்கு தலா ஒரு கோடி ரூபாய் நிதியுதவி
Published on

ராய்ப்பூர்:

சத்தீஸ்கர் மாநிலத்தின் பல மாவட்டங்களில் மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். இவர்களை ஒடுக்கும் பணியில் சி.ஆர்.பி.எப், போலீஸ் அதிரடிப்படையினர் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், சுக்மா மாவட்டத்தின் கிஸ்தாரம் பகுதியில் நேற்று சி.ஆர்.பி.எப் 212-வது பட்டாலியனைச் சேர்ந்த வீரர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.

அப்போது, மண்ணில் புதைக்கப்பட்டிருந்த சக்திவாய்ந்த வெடிகுண்டுகளை மாவோயிஸ்ட்கள் வெடிக்க வைத்தனர். இந்த கோர தாக்குதலில் 9 வீரர்கள் பலியானதோடு, 4 வீரர்கள் படுகாயமடைந்தனர். காயமடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள வீரர்களை சத்தீஸ்கர் மாநில முதல்வர் ராமன் சிங் நேரில் சந்தித்தார்.

இந்நிலையில், சுக்மாவில் வெடிகுண்டு தாக்குதலில் உயிரிழந்த மத்தியப்பிரதேசத்தை சேர்ந்த இரு வீரர்களின் குடும்பத்திற்கு தலா ஒரு கோடி ரூபாய் நிதியுதவி அளிக்கப்படும் என மத்தியப்பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார். மேலும் உத்தரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்த மூன்று வீரர்களின் மனைவிகளுக்கு தலா 20 லட்ச ரூபாயும், அவர்களது பெற்றோருக்கு தலா 5 லட்ச ரூபாயும் நிதியுதவி அளிக்கப்படும் என உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். #SukmaNaxalAttack #Chhattisgarh #TamilNews

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com