டெல்லி செங்கோட்டையில் ராகுல்காந்தி அடுத்த ஆண்டு தேசியக்கொடி ஏற்றுவார் - சித்து பேச்சு

பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று ராகுல்காந்தி பிரதமராகி டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றுவார் என்று காங்கிரஸ் மாநாட்டில் சித்து கூறினார். #CongressPlenarySession #NavjotSinghSidhu #RahulGandhi
டெல்லி செங்கோட்டையில் ராகுல்காந்தி அடுத்த ஆண்டு தேசியக்கொடி ஏற்றுவார் - சித்து பேச்சு
Published on

முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத் சிங் சித்து. பா.ஜனதாவில் இருந்த அவர் பஞ்சாப் சட்டசபை தேர்தலின் போது அதில் இருந்து விலகி காங்கிரசில் சேர்ந்தார்.

பஞ்சாப் தேர்தலில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ.வான சித்து மந்திரியாக உள்ளார். உள்ளாட்சி, சுற்றுலா மற்றும் கலாச்சார துறை அவரிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்த நிலையில் டெல்லியில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் சித்து பங்கேற்றார். இதில் அவர் பேசியதாவது:-

மன்மோகன்சிங் பிரதமராக பதவி வகித்த காலத்தில் பல்வேறு சமயங்களில் கருத்து தெரிவிக்காமல் மவுனம் காத்து இருந்தார். இப்படி குறை சொல்வதற்கு நான் முதலில் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.

மத்தியில் ஆளும் பா.ஜனதா சாதிக்க முடியாதவற்றை அமைதியாக இருந்து கொண்டே மன்மோகன்சிங் சாதித்துள்ளார். அமைதியாக இருந்துகொண்டே நாட்டின் வளர்ச்சிக்கு அவர் கடினமாக பாடுபட்டார். இதை 10 ஆண்டுகளுக்கு பிறகு நான் உணர்ந்துள்ளேன்.

மன்மோகன்சிங் ஆட்சியில் நாட்டின் பொருளாதாரம் அரேபிய குதிரைகளை போன்று பாய்ச்சலில் முன்னேறியது. தற்போதைய பா.ஜனதா ஆட்சியில் பொருளாதாரம் ஆமை வேகத்தில் ஊர்ந்து கொண்டு இருக்கிறது.

பா.ஜனதாவின் பொய்யுரைகள் 4 ஆண்டுகளுக்கு பிறகு அம்பலமாகி விட்டன. பா.ஜனதா பார்ப்பதற்கு மூங்கிலை போன்று கம்பீரமாக தெரிந்தாலும் உள்ளே வெற்றிடம் தான் அதிகமாக இருக்கும்.

பா.ஜனதாவினரிடம் நெருங்கி பழகியவன் என்ற முறையில் இதை கூறுகிறேன்.

ஆனால் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கரும்பு போன்றவர். அவருடைய எண்ணத்திலும் செயலிலும் இனிமையை காணமுடியும்.

அடுத்த ஆண்டு நடைபெறும் பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று ராகுல்காந்தி பிரதமராகி டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றுவார்.

இவ்வாறு அவர் கூறினார். #CongressPlenarySession #NavjotSinghSidhu #RahulGandhi #tamilnews

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com