நவராத்திரி விழாவை முன்னிட்டு கொலு பொம்மைகள் விற்பனை விறுவிறுப்பு

தூத்துக்குடியில், நவராத்திரி விழாவை முன்னிட்டு கொலு பொம்மைகள் விற்பனை விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள குதிரை மீது அமர்ந்த சுவாமி சிலையை காணலாம்
விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள குதிரை மீது அமர்ந்த சுவாமி சிலையை காணலாம்
Published on

தூத்துக்குடி:

நவராத்திரி விழாவை முன்னிட்டு, கோவில்கள் மற்றும் மக்கள் வீடுகளிலும் கொலு வைத்து வழிபடுவது வழக்கம். இந்த கொலுவில் கடவுள் பொம்மைகள் உள்ளிட்ட பல்வேறு விதமான பொம்மைகளை வைத்து பூஜைகள் நடத்தி வழிபடுவார்கள். இந்த ஆண்டு நவராத்திரி விழா நேற்று முன்தினம் தொடங்கியது. விழாவையொட்டி மக்கள் ஆர்வமுடன் வீடுகளில் கொலு வைத்து உள்ளனர். இதனால் தூத்துக்குடியில் சில கடைகளில் விற்பனைக்காக ஏராளமான கொலு பொம்மைகள் அடுக்கி வைக்கப்பட்டு உள்ளன. இந்த பொம்மைகள் காஞ்சீபுரம், தஞ்சாவூர், கும்பகோணம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கொண்டு வரப்பட்டு உள்ளன.

இங்கு ரூ.10 முதல் ரூ.10 ஆயிரம் வரை கொலு பொம்மைகள் விற்பனை செய்யப்படுகிறது. இங்கு அஷ்டலட்சுமி, தசரா, திருமண நிகழ்ச்சி, வளைகாப்பு நிகழ்ச்சி போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளை சித்தரிக்கும் பொம்மைகள் உள்ளன. சுமார் 5 ஆயிரம் வகையான பொம்மைகள் விற்பனைக்காக வைக்கப்பட்டு உள்ளன. இதனை மக்கள் ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர்.

இது குறித்து கொலுபொம்மை விற்பனையாளர் கூறும் போது, ‘கொரோனா காலத்தில் கொலு பொம்மைகள் விற்பனை மந்தமாக இருக்குமோ என்ற நினைத்தோம். ஆனால் வழக்கம் போல் பொம்மை விற்பனை விறுவிறுப்பாக நடந்து வருகிறது. குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா பொம்மைகள் அதிக அளவில் விற்பனையாகி உள்ளன. பொதுமக்கள் முககவசம் அணிந்து வருகின்றனர். சமூக இடைவெளியும் கடைபிடித்து வருகிறோம்’ என்று அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com