

நாட்டறம்பள்ளி:
நாட்டறம்பள்ளியை அடுத்த பச்சூர் குண்டுகொல்லி கிராமத்தில் கடந்த 6 மாதங்களாக குடிநீர் பற்றாக்குறையால் பொதுமக்கள் பெரிதும்
அவதிப்பட்டு வருகின்றனர். இதுபற்றி அதிகாரிகளிடம் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிகிறது. இதனால் ஆத்திரம்
அடைந்த பொதுமக்கள் காலிக்குடங்களுடன் நேற்று காலையில் பச்சூரில் இருந்து குப்பம் செல்லும் சாலையில் திடீரென சாலை மறியலில்
ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து பொதுமக்களிடம் குடிநீர் பிரச்சனைக்கு தீர்வு காணப்படும் என உறுதி
அளித்தனர்.
அதைத் தொடர்ந்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இந்த சாலை மறியலால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.