நாட்டறம்பள்ளி அருகே சைக்கிளில் சென்ற சிறுவன் லாரி மோதி பலி

நாட்டறம்பள்ளி அருகே சைக்கிளில் சென்ற சிறுவன் லாரி மோதி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மரணம்
மரணம்
Published on

நாட்றம்பள்ளி:

நாட்டறம்பள்ளி தாலுகா ஆத்தூர் குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் வீரபத்திரன். விவசாயி. இவரது மகன் சந்தோஷ் (வயது 14)சைக்கிளில் சென்று கொண்டிருந்தான். கல்லாறு என்ற இடத்தில் தேசிய நெடுஞ்சாலையில் செல்லும்போது வாணியம்பாடியில் இருந்து நாட்டறம்பள்ளி நோக்கி வந்த லாரி, சைக்கிளில் சென்ற சிறுவன் மீது மோதியது.

இதில் தலையில் பலத்த காயம் அடைந்த சிறுவன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தான். இது குறித்து நாட்டறம்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து சேலம் பகுதியைச் சேர்ந்த சங்கர் (வயது 30) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com