நாட்டறம்பள்ளி பேரூராட்சி அலுவலகம் முற்றுகை

நாட்டறம்பள்ளி பேரூராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அலுவலகம் முற்றுகை
அலுவலகம் முற்றுகை
Published on

நாட்டறம்பள்ளி:

நாட்டறம்பள்ளி பேரூராட்சி 4-வது வார்டு பொதுமக்களுக்கு குடிநீர் சரிவர வழங்குவதில்லை, குப்பைகளை எடுப்பது கிடையாது என பலமுறை பேரூராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்தும், இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் நாட்டறம்பள்ளி பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கிருந்த அதிகாரிகள், பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் சமரசம் ஏற்பட்டதும், பொதுமக்கள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com