பொம்மை துப்பாக்கியை காண்பித்து சிறுமியை மிரட்டிய வாலிபர் கைது

பயத்தில் சிறுமி அலறவே, அவர் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டார்.போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர்.
பொம்மை துப்பாக்கியை காண்பித்து சிறுமியை மிரட்டிய வாலிபர் கைது
Published on

திருவனந்தபுரம்:

கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் கீழக்கம்பலம் பகுதியை சேர்ந்த 9 வயது சிறுமி ஒருவர் தனது தந்தையுடன் காரில் சென்றார். தாமரச்சல் பைபாஸ் ரோட்டில் காரை நிறுத்திவிட்டு சிறுமியின் தந்தை அங்குள்ள கடைக்கு சென்றார். அப்போது அங்கு முகக்கவசம் மற்றும் தலைக் கவசம் அணிந்து வந்த அல்பின் தாமஸ்(வயது33) என்ற வாலிபர், காரில் தனியாக அமர்ந்திருந்த சிறுமியிடம் பொம்மை துப்பாக்கியை உண்மையான துப்பாக்கி போன்று காண்பித்து மிரட்டியுள்ளார்.

பயத்தில் சிறுமி அலறவே, அவர் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டார். அதுபற்றி கடையில் இருந்து திரும்பிவந்த தந்தையிடம் சிறுமி தெரிவித்தார். அதுபற்றி அவர் போலீசில் புகார்செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர். சம்பவ இடத்தில் இருந்த சி.சி.டி.வி. கேமிராக காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து சிறுமியை மிரட்டிய அல்பின் தாமசை அடையாளம் கண்டு கைது செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com