என் மலர்tooltip icon

    இந்தியா

    உங்கள் ஒரு வாக்கு- 30 இலட்சம் பேருக்கு அரசு வேலை, பெண்களுக்கு மாதம் ரூ.8,500: ராகுல்காந்தி வாக்குறுதி
    X

    'உங்கள் ஒரு வாக்கு'- 30 இலட்சம் பேருக்கு அரசு வேலை, பெண்களுக்கு மாதம் ரூ.8,500: ராகுல்காந்தி வாக்குறுதி

    • ஆகஸ்ட் 15 ஆம் தேதிக்குள் 30 லட்சம் அரசுப் பணிகளுக்கான ஆட்சேர்ப்புப் பணி தொடங்கப்படும்.
    • ஜூலை 1 முதல் ஏழைப் பெண்களின் கணக்கில் மாதம் ₹ 8,500 டெபாசிட் செய்யப்படும்.

    காங்கிரசின் தேர்தல் வாக்குறுதி குறித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில்,

    "உங்கள் ஒரு வாக்கின் வலிமையை புரிந்து கொள்ளுங்கள்

    உங்கள் ஒரு வாக்கு இந்தியாவில் நிகழும் அநீதிகளையும், அடக்குமுறைகளையும் அகற்றும்.

    ஆகஸ்ட் 15 ஆம் தேதிக்குள் 30 லட்சம் அரசுப் பணிகளுக்கான ஆட்சேர்ப்புப் பணி தொடங்கப்படும்.

    ஜூலை 1 முதல் ஏழைப் பெண்களின் கணக்கில் மாதம் ₹ 8,500 டெபாசிட் செய்யப்படும்.

    இளைஞர்களுக்கு ஆண்டுக்கு ரூ 1 லட்சம் முதல் வேலை வழங்கப்படும்.

    அரசியலமைப்பு காக்கப்பட்டு, உரிமைகள் மீட்கப்படும்.

    உங்களின் சொந்த அரசாங்கத்தைத் தேர்ந்தெடுக்கும் உரிமையைப் பாதுகாப்பதன் மூலம் ஜனநாயகம் காப்பாற்றப்படும்.

    ஒடுக்கப்பட்டவர்களுக்கான, இடஒதுக்கீடு நியாயமான முறையில் கிடைக்கப்பெறும்.

    நீர், நிலம், வனம் மீதான பழங்குடியினரின் உரிமைகள் பாதுகாக்கப்படும்

    நீங்கள் இந்தியா கூட்டணிக்கு அளிக்கும் ஒவ்வொரு வாக்கும் வலுவான ஜனநாயகத்தையும், அதிகாரம் பெற்ற குடிமக்களையும் உருவாக்கும்" என்று பதிவிட்டுள்ளார்.

    Next Story
    ×