

உத்தரப் பிரதேசம் மாநிலம் முசாபர்நகரில், போதைப்பொருள் கொடுத்து 5 பேரால், 24 வயது பெண் ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சனிக்கிழமையன்று மாட்டுக்கு தீவனம் அறுக்க வயலுக்கு சென்றபோது, இந்த கொடூரம் அரங்கேறியதாக சார்த்தாவல் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வயலுக்கு சென்றப் பெண் வீடு திரும்பாததால், அவரைத்தேடி குடும்பத்தினர் சென்றுள்ளனர். அப்போது அருகிலுள்ள வனப்பகுதி ஒன்றில் அவர் மயக்கநிலையில் கண்டறியப்பட்டுள்ளார்.
பின்னர் பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் அடிப்படையில், குற்றச்சம்பவத்தில் ஈடுபட்ட உமர் மற்றும் அவரது கூட்டாளிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களை தேடி வருவதாகவும் தலைமை காவல் கண்காணிப்பாளர் சஞ்சய் குமார் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பாதிக்கப்பட்ட பெண் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.