போலீஸ்காரரின் தொல்லை தாங்காமல் இளம்பெண் தற்கொலை

அனில் தீப்தியிடம் பணம் கேட்டு தினமும் தொல்லை கொடுத்ததால் தற்கொலை செய்ய முடிவு செய்தார். போலீசார் அனில், அனிதா, அவரது தந்தை சோமையா சைதுலு ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
போலீஸ்காரரின் தொல்லை தாங்காமல் இளம்பெண் தற்கொலை
Published on

திருப்பதி:

தெலுங்கானா மாநிலம், நாச்சாரம், பாபுஜி நகர் சரஸ்வதி காலனியை சேர்ந்தவர் தீப்தி (வயது 28). இவர் ஹப்சிகுடாவில் உள்ள இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆப் கெமிக்கல் டெக்னாலஜி நிறுவனத்தில் திட்ட உதவியாளராக வேலை செய்து வந்தார்.

இவருடைய தந்தை சங்கீதா ராவ். இவருக்கும் டி.ஜி.பி. அலுவலகத்தில் வேலை செய்யும் போலீஸ்காரர் அனில் என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது.

அனிலின் மனைவி அனிதாவுக்கு வேலை வாங்கித் தருவதாக கூறி கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு சங்கீதாராவ் ரூ.15 லட்சம் வாங்கினார்.

கடந்த செப்டம்பர் மாதம் வரை அனிதாவுக்கு வேலை வாங்கி தரவில்லை. சங்கீதா ராவ் தலைமறைவாகி விட்டார்.

இதையடுத்து அனில் அவரது மனைவி அனிதா, அவரது தந்தை சோமையா சைதுலு ஆகியோர் தந்தை வாங்கிய பணத்தைக் கேட்டு தீப்திக்கு தொல்லை கொடுத்து வந்தனர்.

இதுகுறித்து போலீசில் புகார் செய்தனர். மேலும் கோர்ட்டில் சிவில் வழக்கு தொடர்ந்தனர். அனில் தீப்தியிடம் பணம் கேட்டு தினமும் தொல்லை கொடுத்ததால் தற்கொலை செய்ய முடிவு செய்தார்.

எனது சாவுக்கு அனில், அவரது மனைவி அனிதா, அவரது தந்தை சோமைய சைதுலு ஆகியோர் தான் காரணம். தினமும் பணத்தைக் கேட்டு எனது வாழ்க்கையை சீரழித்து விட்டனர்.

எனது சாவுக்கு காரணமானவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும். எனது உடலை மருத்துவ ஆராய்ச்சிக்கு அளிக்க வேண்டும் என தீப்தி கண்ணீர் மல்க செல்போனில் வீடியோ பதிவு செய்தார்.

பின்னர் வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் கடைசியாக பதிவிட்ட செல்பி வீடியோ காட்சிகளை போலீசில் கொடுத்து புகார் செய்தனர்.

போலீசார் அனில், அனிதா, அவரது தந்தை சோமையா சைதுலு ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com