மசோதா கொண்டு வந்தது ஏன்?- டி.கே.சிவக்குமார் விளக்கம்

கன்னடர்களுக்கு 100 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவை ஆளும் காங்கிரஸ் அரசு கொண்டு வந்துள்ளது.சில தனியார் நிறுவனங்களை சேர்ந்த தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
மசோதா கொண்டு வந்தது ஏன்?- டி.கே.சிவக்குமார் விளக்கம்
Published on

கர்நாடகாவில் அரசு மற்றும் தனியார் துறை பணியிடங்களில் கன்னடர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் இடஒதுக்கீடு மசோதாவுக்கு அம்மநாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

அதன்படி, கன்னடர்களுக்கு 100 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவை ஆளும் காங்கிரஸ் அரசு கொண்டு வந்துள்ளது.

இதற்கிடையே தனியார் துணை பணியிடங்களில் இடஒதுக்கீடு வழங்குவதற்கு சில தனியார் நிறுவனங்களை சேர்ந்த தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

சொந்த மண்ணில் கன்னடர்களின் நலன் காக்கும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக முதலமைச்சர் சித்தராமையா தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

பண்பாடு, கலாச்சாரம் போல வேலைவாய்ப்பு விவகாரத்திலும் அரசு கவனம் செலுத்தும். இதன் காரணமாகவே வேலைவாய்ப்பு மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது என்று கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் விளக்கம் அளித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com