வரலாறு எழுதப்படும் போதெல்லாம் அஜித் தோவலின் பெயர் எழுதப்படும்: லோக்மான்ய திலக் விருது வழங்கி அமித் ஷா பாராட்டு

புனேவில் நடைபெற்ற விழாவில் அஜித் தோவலுக்கு இந்த ஆண்டுக்கான லோக்மான்ய திலக் விருது வழங்கப்பட்டது.
Lokmanya Tilak Award
Amit Shah hails Ajit Doval’s key role in India’s national security
Published on

இந்தியாவின் தேசியப் பாதுகாப்பு மற்றும் வெளியுறவுக் கொள்கைக்கு ஆற்றிய பங்களிப்பிற்காக தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுக்கு, இந்த ஆண்டுக்கான லோக்மான்ய திலக் தேசிய விருதை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வழங்கினார்.

லோக்மான்ய திலக் தேசிய விருது

லோக்மான்ய திலக் தேசிய விருது என்பது தேச வளர்ச்சி மற்றும் முன்னேற்றத் துறையில் ஆற்றிய பணிகளைக் கௌரவிப்பதற்காக நிறுவப்பட்ட ஒரு தேசிய அளவிலான விருதாகும்.

இது லோக்மான்யா என்று பிரபலமாக அறியப்பட்ட இந்திய தேசியவாதத் தலைவரும் சுதந்திரப் போராட்ட வீரருமான பாலகங்காதர திலகரின் பெயரால் அழைக்கப்படுகிறது.

இந்த விருது ஆண்டுதோறும் ஆகஸ்ட் 1 ஆம் தேதி லோக்மான்ய திலகரின் நினைவு தினத்தை முன்னிட்டு வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் மகாராஸ்டிரா மாநிலம் புனேவில் நடைபெற்ற விழாவில், தோவலுக்கு 2026-ஆம் ஆண்டுக்கான லோக்மான்ய திலக் விருதை அமித் ஷா வழங்கினார்.

அஜித் தோவலை பாராட்டிய அமித் ஷா

பின்னர் அமித் ஷா பேசியதாவது:-

இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையை வலுப்படுத்துவதில் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் பெரும் பங்கு ஆற்றியுள்ளார்.

தேசியப் பாதுகாப்பு தொடர்பாக பிரதமர் மோடி எடுக்கும் ஒவ்வொரு முடிவிலும், டோவல் பின்னணியில் தனது பங்கையும், ஆலோசனையையும் வழங்கியுள்ளார்.

வரலாறு எழுதப்படும்போதெல்லாம் உள்நாட்டுப் பாதுகாப்பு மற்றும் வெளிநாட்டுப் பாதுகாப்பை யாராவது பகுப்பாய்வு செய்தால், அப்போது தெளிவாக அஜித் தோவலுக்கு ஒரு பொன்னான பக்கம் ஒதுக்கி வைக்கப்பட வேண்டும். இதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை எஃகு போன்ற உறுதியான முதுகெலும்பு கொண்ட வெளியுறவுக் கொள்கையாக மாறியுள்ளது. இதை யாராலும் மறுக்க முடியாது. நாம் சுய மரியாதையுடன் சேர்த்து, உலகில் நமது நிலையை வலுப்படுத்தியுள்ளோம்.

2014-ல் தேசிய பாதுகாப்பு ஆலோசகராகப் பொறுப்பேற்ற பிறகு, தோவல் பல மூலோபாய யோசனைகளைக் களத்தில் செயல்படுத்த உதவியதுடன், இந்தியாவின் ஆயுதப் படைகளை நவீனமயமாக்குவதிலும், தொழில்நுட்பத்தை வலுப்படுத்துவதிலும், செயல்பாட்டுத் திறனை அதிகரிப்பதிலும், நாட்டின் பாதுகாப்புத் தயார்நிலையை மேம்படுத்துவதிலும் முக்கியப் பங்காற்றினார்.

அஜித் தோவல் என் வீட்டிற்கு வந்திருந்தது எனக்கு நினைவிருக்கிறது. அவர் அளித்த தகவல்களின் விளைவாக, குஜராத் காவல்துறை அகமதாபாத் குண்டுவெடிப்பு சம்பவத்தை மட்டுமல்ல, நாடு முழுவதும் நடந்த 13 குண்டுவெடிப்பு சம்பவங்களையும் ஒரே நேரத்தில் தீர்த்து வைத்தது. இது ஒரு மிகப்பெரிய சாதனை.

ஒரு பத்திரிகையாளர் எவ்வளவு அச்சமற்றவராக இருக்க முடியும் என்பதை பால கங்காதர திலகரின் கேசரி பத்திரிக்கையை படித்தால் மட்டுமே உணர முடியும்.

லோக்மான்ய பாலகங்காதர திலகர் வகுத்த கலாச்சார தேசிய வாதப் பாதையில், இந்தியா இப்போது உறுதியாக முன்னேறி வருகிறது. அந்தப் பயணத்தை யாராலும் பின்னோக்கித் திருப்ப முடியாது.

அத்தகைய நபர்கள் கௌரவிக்கப்படும்போது, அவர்கள் மீதான சமூகத்தின் நன்றியுணர்வு வெளிப்படுகிறது.

இன்று அஜித் தோவலுக்கு வழங்கப்பட்டுள்ள திலக் விருது, இந்த நாட்டிற்காக வாழ்ந்து உழைப்பவர்களுக்கு, இது ஒரு பெரும் உத்வேகத்தின் இடமாக அமையும்” என்று அமித் ஷா கூரினார்.

அஜித் தோவல்

இதைத்தொடர்ந்து பேசிய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், “லோக்மான்ய பாலகங்காதர திலகர் பெயர் சூட்டப்பட்ட இந்த விருதுக்கு நான் நன்றி தெரிவித்து, அதனைப் பணிவுடன் ஏற்றுக்கொள்கிறேன்.

பிரதமர் மோடி மற்றும் அமித் ஷா போன்ற தலைவர்கள் நமக்குக் கிடைத்திருப்பது பெரும் பாக்கியம்” என்று அவர் கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com