

மேற்கு வங்க தேர்தல் தோல்விக்கு பின் திரிணாமுல் காங்கிரஸ் பிளவுபட்டு வருகிறது. 80இல் 50க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் தனிக் குழுவாக பிரிந்து சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி அதிகாரத்தை கைப்பற்றினர்.
பாராளுமன்ற திரிணாமுல் காங்கிரஸ் எம்பிகளும் கிளர்ச்சி குழுவாக மாறியுள்ளனர்.
கிளர்ச்சி குழுவை சேர்ந்த எம்பி ககோலி கோஷ் தஸ்திதார் பேசுகையில்,
"திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 20 எம்பிக்கள் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா அவர்களை நேரில் சந்தித்துள்ளோம்.
நாடாளுமன்றத்திற்குள் எங்களுக்குப் பிரத்யேகமாகத் தனி இருக்கை வசதி செய்து தருமாறு அவரிடம் அதிகாரப்பூர்வமாகக் கோரியுள்ளோம்.
எங்கள் குழுவிடம் நாடாளுமன்ற திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினர்களில் 3ல் 2 பங்கு எம்பிக்களின் பலம் உள்ளது.
எனவே, நாங்கள் தேசியவாத குடிமக்கள் கட்சியுடன் முறைப்படி இணையவுள்ளோம்.
நாட்டின் நலனைக் கருத்தில் கொண்டு, மத்தியில் உள்ள பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியுடன் (NDA) இணைந்து செயல்பட முடிவு செய்துள்ளோம் " என தெரிவித்தார்.
இதனிடையே அதிருப்தி எம்பிக்களை அங்கீரிக்க கூடாது என திரிணாமுல் காங்கிரஸ் மக்களவைக் குழுத் தலைவரான அபிஷேக் பானர்ஜி சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு அவசரமாக ஒரு கடிதம் எழுதியுள்ளார்.