குஜராத்தில் மர்ம கிணறு: தானாக தளும்பும் நீர்- வைரலாகும் வீடியோ

குஜராத் மாநிலத்தில் உள்ள கிணற்றில் தண்ணீர் தானாக தளும்புவதால் மக்கள் பீதி அடைந்துள்ளனர்.
மர்ம கிணறு
மர்ம கிணறு
Published on

குஜராத் மாநிலம் மொர்பி தாலுகாவில் உள்ள வீரபத்ரா கிராமத்தில் உள்ள மர்மமான கிணறு ஒன்று உலக அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது. ஏனென்றால், கடந்த வியாழக்கிழமை, கடல் நீர் தளும்புவதுபோல் இந்த கிணற்றில் உள்ள தண்ணீரும் தளும்பியதுதான் இதற்கு காரணம்.

கடந்த வியாழக்கிழமைக்கு முன்னதாக இந்த கிணற்றில் உள்ள நீர் திடீரென தானாகவே தளும்ப ஆரம்பித்தது. பின்னர் இது படிப்படியாக வியாழக்கிழமை காலை சகஜ நிலைக்கு திரும்பியது. பின்னர், மீண்டும் தளும்ப ஆரம்பித்தது. இதனால் அங்குள்ள மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இந்த தகவலை அருந்த அருகில் உள்ள கிராம மக்களும் அப்பகுதிக்கு விரைந்து வந்து கிணற்றை பார்வையிட்டனர்.

நிலநடுக்கத்திற்கான அறிகுறியா? என மக்கள் அச்சம்

இந்தச் செயல்பாட்டிற்கான துல்லியமான காரணம் இன்னும் தெரியவில்லை. இப்பகுதி நிலநடுக்க அபாயம் கொண்ட தன்மையைக் கொண்டிருப்பதாலும், கடந்த காலங்களில் இங்கு நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளதாலும், இந்த நிகழ்வு அதனுடன் தொடர்புடையதாக இருக்கலாம் என்று சில குடியிருப்பாளர்கள் கருதுகின்றனர். இருப்பினும், அதிகாரிகள் இதுவரை இது குறித்து அதிகாரப்பூர்வமான விளக்கத்தை அளிக்கவில்லை.

மார்பியில் உள்ள ஒரு கிணற்றில் வழக்கத்திற்கு மாறான செயல்பாடுகள் காணப்பட்டதாக வந்த தகவல்களைத் தொடர்ந்து, காந்திநகரிலிருந்து ஒரு குழு அனுப்பப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. நிலநடுக்கம் தொடர்பான செயல்பாடுகள் ஏதுமிருப்பதற்கான அறிகுறி எதுவும் இல்லை. எனவே, வதந்திகளை நம்ப வேண்டாம் என்று பொதுமக்களைக் கேட்டுக்கொள்கிறேன் என்று மார்பி மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com