‘பணியில் ஆர்வம் இல்லை’ - உத்தரப்பிரதேசத்தின் டிஜிபி அதிரடி மாற்றம்

இவர் இந்திய திபேத்திய எல்லை பாதுகாப்பு படை, தேசிய பேரிடர் மீட்பு படை ஆகியவற்றிலும் பணி செய்தது குறிப்பிடத்தக்கது.
டிஜிபியாக இருந்த முகுல் கோயல்
டிஜிபியாக இருந்த முகுல் கோயல்
Published on

லக்னோ:

கடந்த ஆண்டு ஜூலை முதல் உத்தரப்பிரதேசத்தின் டிஜிபியாக இருப்பவர் முகுல் கோயல். இவரை உ.பி அரசு டிஜிபி பதவியில் இருந்து நீக்கி முக்கியத்துவம் இல்லாத பதவியாக கருத்தப்படும் சிவில் பாதுகாப்புத்துறை டிஜி பதவியில் பணி அமர்த்தியுள்ளது.

இதுகுறித்து உ.பி அரசு கூறுகையில், முகுல் கோயலுக்கு பணியில் ஆர்வம் இல்லாததும், அரசு உத்தரவுகளை மதிக்காமல் செயல்பட்டதும் தான் காரணம் என கூறியுள்ளது.

கடந்த மாதம் முகேஷ் கோயல் உ.பி முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அறிவித்த ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொள்ளாமல் இருந்ததுதான் காரணம் என்றும் கூறப்படுகிறது. 

இவர் இந்திய திபேத்திய எல்லை பாதுகாப்பு படை, தேசிய பேரிடர் மீட்பு படை ஆகியவற்றிலும் பணி செய்தது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com