உத்தரப்பிரதேசத்தில் தேர்தல் கருத்துக்கணிப்புக்கு தடை விதிக்க வேண்டும் - சமாஜ்வாடி கட்சி வலியுறுத்தல்

கருத்துக் கணிப்புகளைத் தடை செய்வதால் தோல்வியில் இருந்து சமாஜ்வாடியை காப்பாற்ற முடியாது என்று மாநில பா.ஜ.க.தெரிவித்துள்ளது.
சமாஜ்வாடி, பாஜக
சமாஜ்வாடி, பாஜக
Published on

லக்னோ:


உத்தரபிரதேச மாநிலத்தில் சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பல்வேறு டி.வி. சேனல்கள் கருத்துக்கணிப்பு முடிவுகளை வெளியிட்டு வருகின்றன.  அதற்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரி பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி இந்திய தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதியிருந்தார். இந்நிலையில் இதே கோரிக்கையை வலியுறுத்தி இந்திய தேர்தல் ஆணையத்துக்கு சமாஜ்வாடி கட்சியும் நேற்று கடிதம் எழுதியுள்ளது. அதன் நகல், உத்தரபிரதேச மாநில தலைமை தேர்தல் அதிகாரியிடமும் வழங்கப்பட்டுள்ளது.  

இது குறித்து சமாஜ்வாடி கட்சி மாநிலத் தலைவர் நரேஷ் உத்தம் கூறுகையில், முதல்கட்ட தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் முடிவடைந்த நிலையிலும் டி.வி. சேனல்கள் கருத்துக்கணிப்பு முடிவுகளை வெளியிட்டு வருகின்றன.  இது  தேர்தல் நடத்தை விதிகளை மீறுகிறது, நியாயமான தேர்தலுக்கு கருத்துக்கணிப்பு இடையூறாக அமையும்.  இதற்கு தேர்தல் ஆணையம் உடனடியாகத் தடை விதிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.  

இந்நிலையில் சமாஜ்வாடி கட்சிக்கு பதில் அளித்து பேசிய உத்தரபிரதேச பா.ஜ.க.செய்தித் தொடர்பாளர் ராகேஷ் திரிபாதி, தேர்தலில் தோல்வி அடைந்து விடுவோம் என சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவ் விரக்தியில் உள்ளார். சில நேரங்களில் அவர்  தேர்தல் ஆணையத்தின் பாரபட்சமற்ற தன்மை குறித்து கேள்விகளை எழுப்புகிறார்.  சில சமயங்களில் அவர் டிஜிட்டல் ஊடகம் மூலம் பிரச்சாரம் செய்வதில் உள்ள தமது பலவீனத்தைக் கூறி வருந்துகிறார். இப்போது ​​கணக்கெடுப்புகளை நிறுத்த வேண்டும் என்று அவர் கோருகிறார்.

பிரதமர் மோடி மற்றும் உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் புகழைக் கண்டு அவர் கலங்குகிறார் என்பதே நிதர்சனம். கருத்துக் கணிப்புகளைத் தடை செய்வதால் சமாஜ்வாடியை தோல்வியில் இருந்து காப்பாற்ற முடியாது. இவ்வாறு திரிபாதி கூறினார்.  

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com