சமூக ஊடகங்களில், சட்டத்திற்கு புறம்பான தகவல்களை பகிர்ந்தால் நடவடிக்கை- மத்திய மந்திரி எச்சரிக்கை

சமூக ஊடகங்களை பயன்படுத்துபவர்களின் ரகசியம் பாதுகாக்கப்பட வேண்டியது முக்கியம்.இணைய தளத்தை பயன்படுத்துபவர், சமூக ஊடகக் கணக்குகள் சரிபார்ப்பு கட்டாயமாகும்.
மத்திய மந்திரி ராஜீவ் சந்திரசேகர் (கோப்பு படம்)
மத்திய மந்திரி ராஜீவ் சந்திரசேகர் (கோப்பு படம்)
Published on

பாராளுமன்ற மாநிலங்களவையில் மத்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை இணை மந்திரி ராஜீவ் சந்திரசேகர் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் கூறியுள்ளதாவது:

சமூக ஊடகங்களை பயன்படுத்துபவர்களின் ரகசியம் பாதுகாக்கப்பட வேண்டியது முக்கியம். அதே வேளையில், பொறுப்பற்ற முறையில் பொதுத்தளத்தில் சட்டத்திற்கு புறம்பான தகவல்களை பகிர்ந்தால் தண்டனைக்கு உட்படுத்தப்படுவார்கள்.

இதனை உறுதிசெய்வதற்கு தகவல் தொழில்நுட்பம் விதிகள், 2021 நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இணைய தளத்தை பயன்படுத்துபவர்களுக்கு வெளிப்படையான, பாதுகாப்பான நம்பத்தகுந்த சமூக ஊடகக் கணக்குகள் இருக்க வேண்டும் என்பதில் அரசு முனைப்புடன் செயலாற்றி வருகிறது. அதற்கு செயலாக்கம் தரும் வகையில் தகவல் தொழில்நுட்ப விதிகள் 2021 கொண்டு வரப்பட்டது.

அதன்படி, பகிரப்படும் தகவல்கள் அறிந்தோ, அறியாமலோ, தகவல்களை பெறுபவர்களை ஏமாற்றவோ அல்லது தவறாக வழிநடத்தவோ, காட்சிப்படுத்தவோ, பதிவேற்றவோ, மாற்றவோ, வெளியிடவோ, அனுப்பவோ, சேமிக்கவோ, புதுப்பிக்கவோ அல்லது பகிரவோக் கூடாது. பொய்யான, தவறாக வழிநடத்தும் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டால் தகவல் தொழில்நுட்ப சட்டத்தின்படி தண்டிக்கப்படுவார்கள்.

மேற்கூறியவற்றை மீறும் பட்சத்தில், சம்பந்தப்பட்ட அரசு அல்லது அதன் அமைப்பு ரீதியிலான புகார் அல்லது நீதிமன்ற உத்தரவு அல்லது நோட்டீஸ் பெறப்பட்டதன் பேரில், தானாக முன்வந்து, தகவல்களை பகிரவோ, சேமிக்கவோ அல்லது வெளியிடவோ கூடாது. அவதூறு, பொது மக்கள் நலன், கண்ணியம், ஒழுக்கம், மீறப்படும் போது தகவல் தொழில்நுட்ப சட்டத்தின்படி தண்டிக்கப்படுவார்கள். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com