வீட்டை விட்டு வெளியேறி நிலத்தடியில் வீடு கட்டி வாழும் வாலிபர்!

லேப்டாப் பயன்படுத்துவதும், செல்போன் சார்ஜ் செய்வதற்கான வசதிகளையும் செய்துள்ளார்.
MadhyaPradesh UndergroundHouse
UndergroundHouse
Published on: 

மத்தியப் பிரதேச மாநிலம் ஜாபுவா பகுதியைச் சேர்ந்த அர்ஜுன் என்ற வாலிபர், பெற்றோரால் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டதைத் தொடர்ந்து, கிராமத்தில் உள்ள ஒரு வயல்வெளியில் தனக்கென ஒரு நிலத்தடி வீட்டை உருவாக்கி வசித்து வருகிறார்.

கதவு, ஜன்னல் இல்லாத மண் வீடு:

அர்ஜுன் என்ற வாலிபர் தனக்கு வசிப்பிடம் இல்லாததால் தரையைத் தோண்டி இந்தச் சிறிய நிலத்தடி வீட்டை உருவாக்கியுள்ளார்.

இந்த வீட்டிற்கு முறையான முன் கதவோ அல்லது காற்றோட்டத்திற்கான ஜன்னல்களோ இல்லை. முற்றிலும் மண்ணுக்குள்ளேயே இந்த வீடு செதுக்கப்பட்டுள்ளது.

நவீன வசதிகளுடன் கூடிய எளிய கட்டமைப்பு:

மிகவும் குறுகிய மற்றும் எளிமையான அமைப்பைக் கொண்ட இந்த வீட்டிற்குள் அர்ஜுன் வாழத் தேவையான பல வசதிகளைச் செய்துள்ளார்.

தூங்குவதற்காக மண்ணிலேயே ஒரு மேடை போன்ற அமைப்பை உருவாக்கி, அதன் மேல் பாயும் படுக்கை விரிப்பும் போடப்பட்டுள்ளது.

மழையிலிருந்து பாதுகாத்துக் கொள்ள வீட்டின் மேற்பகுதியில் தார்பாய் கொண்டு கூரை அமைக்கப்பட்டுள்ளது. மண் வீட்டிற்குள் சீரியல் பல்புகளையும், லேப்டாப் பயன்படுத்துவதும், செல்போன் சார்ஜ் செய்வதற்கான வசதிகளையும் செய்துள்ளார்.

ஆனால் இதற்கு மின்சாரம் எவ்வாறு கிடைக்கிறது என்பது இன்னும் தெளிவாக கிடைக்கவில்லை. நவீன வசதிகளுடன் கூடிய இந்த எளிய கட்டமைப்புகளை வடிவமைத்து வாழ்ந்து வருகிறார்.

வியப்பில் நெட்டிசன்கள்:

இவரின் புகைப்படங்களைப் பார்த்த நெட்டிசன்கள் பலரும், "இந்தக் குறுகிய இடத்தில் மூச்சுமுட்டுவது போல் உள்ளது, இதற்குள் எப்படி மணிக்கணக்கில் வசதியாக இருக்க முடிகிறது?" என்று ஆச்சரியம் தெரிவித்து வருகின்றனர்.

அதே வேளையில், அர்ஜுனின் இந்தத் தனித்துவமான முயற்சியைப் பாராட்டியும் பலர் கருத்துக்களைப் பதிவிட்டு வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com