இது மட்டும் இன்னும் மாறல.. டிக்கெட் இருந்தும் சீட் இல்லை.. 'வந்தே பாரத்' பயணி அங்கலாய்ப்பு

டிக்கெட் இல்லாத பலர் சவாரி செய்து மகிழ்ந்தனர்.உங்கள் பயண விவரங்களைப் பகிருமாறு கேட்டுக்கொள்கிறோம்.
இது மட்டும் இன்னும் மாறல.. டிக்கெட் இருந்தும் சீட் இல்லை.. 'வந்தே பாரத்' பயணி அங்கலாய்ப்பு
Published on

காசு கொடுக்க தயாராக இருந்தும் ஏன் சாதாரண எக்பிரஸ் ரெயிலில் செல்ல வேண்டும் என்று நொந்துகொள்பவர்களுக்காகப்  பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் தலைமையிலான மத்திய அரசு பிரத்தேயகமாக அறிமுகப்படுத்தியது தான் வந்தே பாரத்.

அப்படிப்பட்ட அதிநவீன ரெயிலிலும் டிக்கெட்டை புக் செய்து சொகுசாக பயணிக்கலாம் என்ற கற்பனையுடன் எதிர்பார்த்து வந்த பயணி தனக்கு சீட் கூட கிடைக்காமல் தவித்ததாக எக்ஸ் தளத்தில் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள பதிவில், #VandeBharatExpress இல் எனது அனுபவத்தால் ஏமாற்றமடைந்தேன். டிக்கெட் இருந்தும், இருக்கைகள் கிடைக்கவில்லை, டிக்கெட் இல்லாத பலர் சவாரி செய்து மகிழ்ந்தனர்.

மோசமான நிர்வாகம், இருக்கை கிடைப்பதை சரிபார்க்காமல் வகைதொகை இல்லாமல் டிக்கெட்டுகளை விற்கிறது. @RailMinIndia டிக்கெட்டுகளுக்கான சரியான சோதனைகள் இல்லை என்று பதிவிட்டு ஒரு போட்டோவையும் அட்டாச் செய்துள்ளார். 

இந்த போஸ்ட் ரெயில்வே துறை கண்ணில் தட்டுப்படவே , உங்கள் பயண விவரங்களைப் பகிருமாறு கேட்டுக்கொள்கிறோம். உங்கள் புகாரின் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தைரியம் கொடுத்து ஆறுதல் படுத்தி உள்ளது. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com