

மத்திய அரசு மற்றும் ஆளும் பாஜகவின் நிர்வாகச் செயல்பாடுகளைக் கடுமையாக விமர்சித்துப் பேசியுள்ள ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால், பிரதமர் நரேந்திர மோடியை நோக்கி அக்னி கணைகளை வீசியுள்ளார்.
டெல்லியில் நடைபெற்ற முக்கிய அரசியல் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அரவிந்த் கெஜ்ரிவால், மத்திய அரசையும் பிரதமர் மோடியையும் மிகக் கடுமையான வார்த்தைகளால் சாடினார்.
மத்திய அரசின் அடக்குமுறைகள் மற்றும் எதிர்க்கட்சிகள் மீதான நடவடிக்கைகளைச் சுட்டிக்காட்டிப் பேசிய கெஜ்ரிவால், "இந்த ஜனநாயக நாடு மக்களுக்கே சொந்தமானது. இந்த நாடு உங்கள் தந்தையின் சொத்து அல்ல Mr.மோடி!" என்று மிக ஆவேசமாகக் கூறினார்.
மத்திய அரசு தனக்கு இருக்கும் அதிகாரத்தைப் பயன்படுத்தித் தவறான வழிகளில் ஆட்சி நடத்துவதாகவும், மக்களின் அடிப்படை உரிமைகளையும் குரல்களையும் நசுக்கப் பார்ப்பதாகவும் கெஜ்ரிவால் குற்றஞ்சாட்டினார்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளை முடக்க நினைக்கும் போக்கிற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆம் ஆத்மி கட்சி மற்றும் அதன் கூட்டணி அமைப்புகள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து போராட்டங்களை தீவிரப்படுத்தி வருகின்றன.
அரவிந்த் கெஜ்ரிவாலின் இந்த அதிரடியான கருத்து, தேசிய அரசியலிலும் சமூக வலைதளங்களிலும் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. ஆம் ஆத்மி தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்கள் இக்கருத்தைப் பரப்பி வரும் நிலையில், பாஜக தரப்பில் இருந்து இதற்குக் கடுமையான எதிர்ப்புகளும் பதிலடிகளும் வரத் தொடங்கியுள்ளன.