பச்சிளம் குழந்தையை முகத்தில் தண்ணீரை ஊற்றி கொன்ற தாய்

குழந்தைக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டு விட்டதாக கூறி கோட்டயம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றுள்ளார்.குழந்தையை கொடூரமாக கொன்ற நீத்துவை போலீசார் கைது செய்தனர்.
பச்சிளம் குழந்தையை முகத்தில் தண்ணீரை ஊற்றி கொன்ற தாய்
Published on

திருவனந்தபுரம்:

கேரள மாநிலம் பத்தினம் திட்டா மாவட்டம் மல்லம்பள்ளி பகுதியை சேர்ந்தவர் நீத்து (வயது21). அவர் திருச்சூரை சேர்ந்த வாலிபர் ஒருவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. அவர்களுக்கு திருமணமாகாத நிலையில், நீத்து கர்ப்பமாகியதாக தெரிகிறது.

இருந்தபோதிலும் காதலர்கள் திருமணம் செய்து கொள்ளவில்லை. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நீத்துவுக்கு சுமத்ரா பகுதியில் உள்ள வீட்டில் வைத்து குழந்தை பிறந்திருக்கிறது. அந்த குழந்தைக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டு விட்டதாக கூறி கோட்டயம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றுள்ளார்.

ஆனால் அந்த குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். பின்பு அந்த குழந்தையின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அந்த குழந்தையின் மூக்கில் தண்ணீர் புகுந்ததால் மூச்சு திணறி இறந்திருப்பது தெரிய வந்தது. இதுகுறித்து போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

அவர்கள் குழந்தையின் தாயிடம் விசாரணை நடத்தினர். ஆனால் தனக்கு எதுவும் தெரியாது என்று தெரிவித்தபடி இருந்திருக்கிறார். இருந்தபோதிலும் போலீசார் தொடர்ந்து கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தியதால், தனது குழந்தையை கொன்றதை நீத்து ஒப்புக்கொண்டார்.

அவர் தனது குழந்தையின் முகத்தில் தொடர்ந்து தண்ணீரை ஊற்றி மூச்சு திணறடித்து கொடூரமாக கொலை செய்திருக்கிறார். திருசூரை சேர்ந்த வாலிபர் ஒருவரை நீத்து காதலித்து வந்த நிலையில், அவர்களுக்கிடையே நெருக்கம் அதிகமாக இருக்கிறது. இதனால் நீத்து கர்ப்பமாகி இருக்கிறார். அதன்பிறகும் இருவரும் திருமணம் செய்யாமலேயே இருந்தனர்.

இந்நிலையில் அவருக்கு குழந்தை பிறந்துவிட்டது. திருமணமாகாத நிலையில் குழந்தை பிறந்திருக்கிறது என்று மற்றவர்களுக்கு தெரிந்தால் அவமானமாகிவிடும் என்பதால் வீட்டில் வைத்தே குழந்தை பெற்றெடுத்து கொன்றிருக்கிறார்.

மேற்கண்ட தகவல்கள் போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து பெற்ற குழந்தையை கொடூரமாக கொன்ற நீத்துவை போலீசார் கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com