சிறுவர்களுக்கு கோவாக்சின் தடுப்பூசி - இந்திய மருத்துவ கட்டுப்பாட்டு ஆணையரகம் அனுமதி

மருத்துவ பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசிக்கு இந்திய மருத்துவ கட்டுப்பாட்டு ஆணையரக ஜெனரல் அனுமதி வழங்கி உள்ளார்.
சிறுவர்களுக்கான கோவாக்சின் தடுப்பூசிக்கு அனுமதி
சிறுவர்களுக்கான கோவாக்சின் தடுப்பூசிக்கு அனுமதி
Published on

கொரோனாவை தொடர்ந்து தற்போது ஒமைக்ரான் வைரஸ் அச்சுறுத்தல் அதிகரித்து வருவதால் தடுப்பு நடவடிக்கைகளை மத்திய அரசு தீவிரப்படுத்தி உள்ளது.

நாடு முழுவதும் 18 வயதுக்கு மேற்பட்டோரில் தகுதியானவர்களுக்கு கோவாக்சின் மற்றும் கோவி ஷில்ட் கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன.  ஜனவரி 3ம் தேதி முதல் 12 வயது முதல் 18 வயது வரை உள்ள சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

முன்னதாக ஐதராபாத்தை சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்த சிறுவர்களுக்கான கோவாக்சின் தடுப்பூசியை இந்திய மருத்துவ கட்டுப்பாட்டு ஆணையரக நிபுணர்கள் 10 வாரங்கள் ஆய்வு செய்தனர். அந்த மருத்துவ பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் சிறுவர்களுக்கான கோவாக்சின் தடுப்பூசிக்கு அவசர கால பயன்பாட்டின் அடிப்படையில்  சில கட்டுப்பாடுகளுடன் கூடிய அனுமதியை இந்திய மருத்துவ கட்டுப்பாட்டு ஆணையரக ஜெனரல் வழங்கியுள்ளார்.

சிறுவர்களுக்கான கொரோனா தடுப்பூசி திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாக மருத்துவ அறிவியல் நிபுணர்களின் கருத்துக்களை அறிய மத்திய சுகாதாரத்துறை காத்திருந்த நிலையில் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ கட்டுப்பாட்டு ஆணையராக மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com