திருப்பதி வனப்பகுதியில் நடமாடும் காட்டு யானைகளிடம் இருந்து பக்தர்களை பாதுகாப்பது எப்படி?

வனப்பகுதியில் இருப்பவர்கள், வசிப்பவர்கள் பச்சை நிற உடையை அணிய வேண்டும். ஒருவரையோ, கும்பலாக இருக்கும் மக்களையோ காட்டு யானைகள் விரட்டினால் வளைந்து ஓட வேண்டும்.
காட்டு யானைகளிடம் இருந்து பக்தர்களை பாதுகாப்பது குறித்து பயிற்சி அளிக்கப்பட்ட காட்சி.
காட்டு யானைகளிடம் இருந்து பக்தர்களை பாதுகாப்பது குறித்து பயிற்சி அளிக்கப்பட்ட காட்சி.
Published on

திருப்பதி:

திருமலை சேஷாசலம் வனப்பகுதியில் காட்டு யானைகள் அட்டகாசம் செய்தன. மேலும் திருப்பதி மலைப்பாதைகளிலும் காட்டு யானைகள் நடந்து வந்தன. இதனால் திருமலைக்கு சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் அச்சப்பட்டனர்.

இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க திருமலை- திருப்பதி தேவஸ்தானம் வனத்துறை, காட்டுயானைகளிடம் இருந்து பக்தர்கள், பொதுமக்களை பாதுகாப்பது எப்படி? என்பது குறித்தும், யானைகளை காட்டுக்குள் விரட்டியடிக்கும் முறைகள் குறித்தும் அதிகாரிகளுக்கும், ஊழியர்களுக்கும் திருப்பதியில் உள்ள சுவேத பவனில் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது.

இமாச்சலப் பிரதேசம் மாநிலத்தை சேர்ந்த நிபுணரும் டாக்டருமான ருத்£ ஆதித்யா என்பவர் பங்கேற்று செயல் விளக்கம் வழங்கி பயிற்சி அளித்தார்.

காட்டு யானைகள் மக்கள் கூட்டத்தை நோக்கி வரும் போது யாரும் கூச்சல் போடவோ, கல்வீசி தாக்குவதோ செய்யக்கூடாது.

மக்கள் அமைதியாக இருக்க வேண்டும். வத்தல் மிளகாய்களை ஒரு இரும்பு அல்லது தகர டப்பாவில் போட்டு தீ வைக்க வேண்டும். அதன் புகை காற்றில் பரவி நெடியை உண்டாக்கும்.

அப்போது காட்டுயானைகள் நெடியை முகர்ந்ததும் மூச்சுதிணறலால் மெல்ல பின்நோக்கி நகர்ந்து காட்டுக்குள் சென்று விடும்.

பச்சை மூங்கில் மரக்குழாய்க்குள் வத்தல் மிளகாயை நிரப்பி தீ வைக்க வேண்டும். தீ எரிந்து அதன் புகை வெளியேறும் போது மிளகாய் புகை நெடியை சுவாசிக்க முடியாமல் காட்டு யானைகள் சிரமப்பட்டு தப்பியோட முயற்சி செய்யும்.

வனப்பகுதியில் இருப்பவர்கள், வசிப்பவர்கள் பச்சை நிற உடையை அணிய வேண்டும். ஒருவரையோ, கும்பலாக இருக்கும் மக்களையோ காட்டு யானைகள் விரட்டினால் வளைந்து ஓட வேண்டும். காட்டுயானைகள் தாக்க வரும்போது நாம் அழக்கூடாது. புத்திசாலி தனமாக தப்பிக்க வழி தேடி வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com