யார் துரோகி?: காங்கிரஸ் தலைவர் திக்விஜய் சிங்கின் கருத்துக்கு ஜோதிராதித்ய சிந்தியா பதிலடி

காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறிய ஜோதிராதித்ய சிந்தியாவை துரோகி என்று விமர்சித்த காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங்கிற்கு பதிலடி கொடுத்துள்ளார்.
ஜோதிராதித்ய சிந்தியா
ஜோதிராதித்ய சிந்தியா
Published on

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மத்திய பிரதேசத்தின் முன்னாள் முதல்வருமான திக்விஜய் சிங், காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறிய ஜோதிராதித்ய சிந்தியாவை துரோகி என்று குறிப்பிட்டு பேட்டி அளித்தார்.

இதற்கு பதிலடி கொடுத்த ஜோதிராதித்ய சிந்தியா, " நான் அந்த அளவுக்கு கீழ்த்தரமாக இறங்க விரும்பவில்லை. ஒசாமாவை ‘ஒசாமா ஜி’ என்று அழைப்பவர்கள்.. ஆட்சிக்கு வந்ததும் 380-வது சட்டத்தை திரும்பப்பெறுவோம் என்று சொன்னவர்கள்.. யார் துரோகி, யார் துரோகி இல்லை என்பதை மக்கள் முடிவு செய்வார்கள்" என்றார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com