உ.பி தேர்தல் பிரசாரம்: சமாஜ்வாடி கட்சி தலைவர் ஆசம் கானுக்கு இடைக்கால ஜாமீன் வழங்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

உத்தரப் பிரதேச சட்டசபை தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட இடைக்கால ஜாமீன் வழங்ககோரி அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் பலமுறை கோரிக்கை விடுத்தும் விசாரிக்க மறுத்துவிட்டதாக ஆசன் கான் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதிட்டார்.
உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்
Published on

இந்த தேர்தலில் ஆளும் பாஜக, காங்கிரஸ், சமாஜ்வாடி உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடுகின்றன. இதனால் வெற்றிப்பெறும் நோக்கில் தீவிர பிரசாரத்தில் ஈடுபடுகின்றனர்.

இந்நிலையில், கடந்த 2020-ம் ஆண்டு நில அபகரிப்பு, ஆக்கிரமிப்பு உள்ளிட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் சமாஜ்வாடி கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான ஆசம் கான் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட இடைக்கால ஜாமீன் வழங்குமாறு உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி எல்.என்.ராவ் தலைமையிலான அமர்வு, ஆசன் கானுக்கு இடைக்கால ஜாமீன் வழங்க மறுத்ததோடு, இது தொடர்பாக அலகாபாத் உயர்நீதிமன்றத்தை அணுகுமாறும் கேட்டுக் கொண்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com