ராகுலுடன் சரண்ஜித் சன்னி
ராகுலுடன் சரண்ஜித் சன்னி

பஞ்சாப் முதல் மந்திரி வேட்பாளர் சரண்ஜித் சன்னி - ராகுல் காந்தி அறிவிப்பு

பஞ்சாப் மாநிலத்தில் சட்டசபை தேர்தலுக்கான பிரச்சாரத்தில் அனைத்து கட்சிகளும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.
Published on

அமிர்தசரஸ்:

பஞ்சாப் மாநிலத்தில் இந்த மாதம் 20-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைக்கும் நோக்கில் காங்கிரஸ் கட்சி களமிறங்கியுள்ளது. 

காங்கிரசில் இருந்து விலகி தனிக்கட்சி தொடங்கிய முன்னாள் முதல் மந்திரி அமரீந்தர் சிங், பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கிறார். காங்கிரசுக்கு இந்தக் கூட்டணி கடும் சவாலை அளிக்கும் எனத் தெரிகிறது.

இதற்கிடையே, பஞ்சாப் மாநிலத்தில் உள்ள 86 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் கட்சி வெளியிட்டது.

முதல் மந்திரி சரண் ஜித் சன்னி சம்குர் சாகிப், பகதூர் தொகுதியிலும், நவ்ஜோத் சிங் சித்து கிழக்கு அமிர்தசரஸ் தொகுதியிலும், சோனு சூட்டின் சகோதரி மாளவிகா சூட் மோகா தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்.

இந்நிலையில், பஞ்சாப் சட்டசபை தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சியின் முதல் மந்திரி வேட்பாளர் சரண் ஜித் சிங் என அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்தி இன்று அறிவித்தார். அப்போது நவ்ஜோத் சிங் சித்துவும் உடனிருந்தார்.

லூதியானாவில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் ராகுல் காந்தி இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

X

Maalai Malar
www.maalaimalar.com