ராகுல் பஜாஜ் மறைவு - ஜனாதிபதி ராம்நாத், பிரதமர் இரங்கல்

தொழிலதிபர் ராகுல் பஜாஜ் பத்ம பூஷண் உள்ளிட்ட பல விருதுகளை பெற்றுள்ளார். ராஜ்யசபா எம்.பி.யாகவும் பதவி வகித்துள்ளார்.
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்
Published on

புதுடெல்லி:

பஜாஜ் குழுமத்தின் முன்னாள் தலைவர் ராகுல் பஜாஜ் (83), உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். வயது முதிர்வு மற்றும் உடல்நலக் கோளாறு காரணமாக மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த ராகுல் பஜாஜ் இன்று பிற்பகல் காலமானார். 

இந்நிலையில், தொழிலதிபர் ராகுல் பஜாஜின் மறைவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, ராம்நாத் கோவிந்த வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், அவரது தொழில் வாழ்க்கை நாட்டின் பெருநிறுவனத் துறையின் எழுச்சி மற்றும் உள்ளார்ந்த வலிமையைப் பிரதிபலித்தது என பதிவிட்டுள்ளார்.

இதேபோல், ராகுல் பஜாஜ் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். 

X

Maalai Malar
www.maalaimalar.com