

இன்று முதல் மே 1-ம் தேதி வரை நடைபெறவுள்ள மூன்று நாள் உச்சி மாநாட்டில், அரசாங்க தொழில் கொள்கை, எம்எஸ்எம்இ, புதிய தொழில் மற்றும் பிற கண்டுபிடிப்புகள் ஆகியவற்றின் பல்வேறு அம்சங்களை உள்ளடக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பிரதமர் மோடியின் அலுவலக டுவிட்டர் பக்கத்தில் கூறியதாவது:-
படிதார் சமூகத்தின் சமூக- பொருளாதார மேம்பாட்டிற்கு உத்வேகத்தை வழங்கும் வகையில் சர்தார்தம் 'மிஷன் 2026-ன்' கீழ் படிதார் வணிக உச்சி மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
உச்சி மாநாடு இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஏற்பாடு செய்யப்படுகிறது. முதல் இரண்டு உச்சி மாநாடுகள் 2018-ம் ஆண்டு மற்றும் 2020-ம் ஆண்டுகளில் நடைபெற்றன.
தற்போதைய உச்சி மாநாடு இன்று சூரத்தில் 'ஆத்மநிர்பர் சமூகம் ஆத்மநிர்பர் குஜராத் மற்றும் இந்தியா' என்கிற முக்கிய கருப்பொருளின் கீழ் உச்சிமாநாடு நடைபெறுகிறது.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.