குஜராத் - 108 அடி உயர அனுமன் சிலையை நாளை காணொலி மூலம் திறந்துவைக்கிறார் பிரதமர் மோடி

குஜராத்தின் மோர்பி மாவட்டத்தில் பரம் பூஜ்ய பாபு கேசவானந்ஜி ஆசிரமத்தில் அமைக்கப்பட்டுள்ள 108 அடி உயர அனுமன் சிலையை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்.
பிரதமர் மோடி
பிரதமர் மோடி
Published on

அகமதாபாத்:

குஜராத் மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.

நாடு முழுவதும் நாளை அனுமன் ஜெயந்தி கொண்டாடப்படுகிறது.

இந்நிலையில், குஜராத் மாநிலம் மொர்பி மாவட்டத்தில் பரம் பூஜ்ய பாபு கேசவானந்ஜி ஆசிரமத்தில் அமைக்கப்பட்டுள்ள 108 அடி உயர பிரம்மாண்டமான அனுமன் சிலை காணொலி காட்சி மூலம் பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்கிறார்.

ஏற்கனவே, 2010-ல் சிம்லாவில் அமைக்கப்பட்ட அனுமன் சிலை திறந்து வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com