மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு: ஆம் ஆத்மி வெற்றியை வரவேற்ற சித்து

பஞ்சாப் தேர்தலில் அமோக வெற்றிப் பெற்ற ஆம் ஆத்மி கட்சிக்கு காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து
காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து
Published on

டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியினர் கட்சியின் தலைமை அலுவலகத்தில் வெற்றியை கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில், பஞ்சாப் தேர்தலில் அமோக வெற்றிப் பெற்ற ஆம் ஆத்மி கட்சிக்கு காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சித்து தனது டுவிட்டர் பக்கத்தில், "மக்களின் தீர்ப்பு மகேசன் தீர்ப்பு. பஞ்சாப் மக்களின் ஆணையை பணிவுடன் ஏற்றுக் கொள்கிறேன். ஆம் ஆத்மி கட்சிக்கு வாழ்த்துக்கள்" என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ஆம் ஆத்மி கட்சித் தலைவர் ராகவ் சதா கூறியதாவது:-

ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் அக்கட்சியின் முதல்வர் வேட்பாளர் பகவந்த் மான் ஆகியோருக்கு இடையேயான கூட்டுப் பணியை பஞ்சாப் மக்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர் என்பதை இந்த முடிவுகள் காட்டுகின்றன. எதிர்காலத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் பாஜகவிற்கு முக்கிய சவாலாக இருப்பார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com