மொரீஷியஸ் பிரதமர் பிரவிந்த் குமார் இந்தியா வருகை

விமான நிலையத்தில் இருந்து ராஜ்பவனுக்குச் செல்லும் இரு பிரதமர்களையும் ஆயிரக்கணக்கானோர் திரண்டு வரவேற்பு அளிக்கவுள்ளனர்.
மொரீஷியஸ் பிரதமருக்கு சிறப்பு வரவேற்பு
மொரீஷியஸ் பிரதமருக்கு சிறப்பு வரவேற்பு
Published on

மொரீஷியஸ் பிரதமர் பிரவிந்த் ஜக்நாத் இந்தியா வந்துள்ளார். இவருக்கு அகமதாபாத் ஜாம்நகர் விமான நிலையத்தில் சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது.

குஜராத் வந்துள்ள பிரதமர் மோடியும், மொரீஷியஸ் பிரதமர் பிரவிந்த் ஜக்நாத் ஆகியோர் இன்று மாலை 6 மணியளவில் நடைப்பெறவுள்ள ரோட் ஷோவிற்கு தலைமை தாங்க உள்ளனர். அங்கு, பிரதமர் மோடி உலக சுகாதார மையத்தின் பாரம்பரிய மருந்துகளுக்கான உலகளாவிய மையத்திற்கு அடிக்கல் நாட்டுகிறார்.

பின்னர், இருவரும் அங்கிருந்த அகமதாபாத் செல்லவுள்ளனர். தொடர்ந்து, விமான நிலையத்தில் இருந்து ராஜ்பவனுக்குச் செல்லும் இரு பிரதமர்களுக்கும் ஆயிரக்கணக்கானோர் திரண்டு வரவேற்பு அளிக்கவுள்ளனர்.  

X

Maalai Malar
www.maalaimalar.com