போபாலில் பயங்கர தீ விபத்து- விமான படை உதவியுடன் தீ அணைக்கப்பட்டது

மத்திய பிரதேச மாநிலம் தலைநகர் போபாலில் பல அரசு துறை அலுவலகங்களை கொண்ட சத்ராபவன் உள்ளது. முதலில் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
போபாலில் பயங்கர தீ விபத்து- விமான படை உதவியுடன் தீ அணைக்கப்பட்டது
Published on

போபால்:

மத்திய பிரதேச மாநிலம் தலைநகர் போபாலில் பல அரசு துறை அலுவலகங்களை கொண்ட சத்ராபவன் உள்ளது. பழங்குடியினர் நலத்துறையின் பிராந்திய அலுவலகம் அமைந்துள்ள இந்த அரசு கட்டிடத்தின் 3-வது மாடியில் நேற்று மாலை 4 மணியளவில் திடீரென்று தீப்பிடித்தது. 3-வது மாடியில் இருந்து மேலே உள்ள 3 தளங்களிலும் தீ மளமளவென வேகமாக பரவியது. ஏ.சி. மெஷின்கள், சிலிண்டர்களில் தீ பரவியதால் பல வெடிப்புகள் ஏற்பட்டன. இதனால் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

முதலில் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். பின்னர் இந்திய விமானப்படையின் ஹெலிகாப்டர்கள் தீயை அணைக்க பயன்படுத்தப்பட்டது. 14 மணி நேர கடும் போராட்டத்துக்கு பிறகு தீ அணைக்கப்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com