லஞ்ச வழக்கில் ஐ.ஏ.எஸ். அதிகாரி கைது

டெல்லி அரியானா பவனில் குடியுரிமை ஆணையராக இருந்து வருபவர் தர்மேந்தர் சிங். லலித் மிட்டல் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் குருகிராமில் அரியானா போலீசார் தர்மேந்தர் சிங்கை கைது செய்தனர்.
லஞ்ச வழக்கில் ஐ.ஏ.எஸ். அதிகாரி கைது
Published on

குருகிராம்:

டெல்லி அரியானா பவனில் குடியுரிமை ஆணையராக இருந்து வருபவர் தர்மேந்தர் சிங். ஐ.ஏ.எஸ். அதிகாரியான இவர் கடந்த ஆண்டு சோனிபட் மாநகராட்சி கமிஷனராக பணியாற்றினார்.

இந்த சமயத்தில் இவர் கட்டிடங்கள் கட்டுவதற்காக விதி முறைகளை மீறி டெண்டர் தொகையை அதிகரித்து ரூ.1 கோடியே 11 லட்சம் லஞ்சம் வாங்கியதாக புகார் எழுந்தது.

இது தொடர்பாக டெல்லி ரஞ்சித் நகரை சேர்ந்த லலித் மிட்டல் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் குருகிராமில் அரியானா போலீசார் தர்மேந்தர் சிங்கை கைது செய்தனர். இன்று அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுவார் என போலீசார் தெரிவித்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com