டெல்லியில் 18வது மாடி உச்சியில் கட்டிடம் இடிந்தது- 2 பேர் பலி

டெல்லியில் 18-வது மாடி உச்சியில் கட்டிடம் இடிந்த விபத்தில் 2 பேர் பலியாகினர். மீட்பு பணியினை விரைவுபடுத்துவதற்காக தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் வரவழைக்கப்பட்டு உள்ளனர்.
அடுக்குமாடி குடியிருப்பு
அடுக்குமாடி குடியிருப்பு
Published on

டெல்லி புறநகரில் குர்கான் என்ற பகுதியில் ஏராளமான அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளன. அரியானா மாநிலத்துக்குட்பட்ட அந்த பகுதியில் சின்ட்லா பாரடிசோ ஹவுசிங் காம்ப்ளக்ஸ் குடியிருப்பு உள்ளது.

இந்த அடுக்குமாடி குடியிருப்பில் 18 மாடிகளுடன் தனி வளாகம் ஒன்று உள்ளது.

குர்கானில் 109-வது செக்டார் பகுதியில் அமைந்துள்ள அந்த 18-வது மாடி கட்டிடத்தின் உச்சி பகுதி இன்று அதிகாலை திடீரென இடிந்தது. மேற்கூரை இடிந்து 18-வது மாடியில் வசிப்பவர்களின் வீடுகளுக்குள் விழுந்தது.

இதில் ஏராளமானோர் சிக்கி கொண்டனர். 18-வது மாடி இடிந்ததால் மற்ற தளங்களில் இருப்பவர்கள் அதிர்வை உணர்ந்தனர். அவர்கள் அலறியடித்தபடி வெளியே ஓடி வந்தனர்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் மீட்பு படையினர் அந்த குடியிருப்பு பகுதிக்கு சென்று உயரமான ஏணிகள் மூலம் மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். இடிபாடுகளில் சிக்கிய பலர் காயங்களுடன் காப்பாற்றப்பட்டு மருத்துவமனைகளுக்கு அனுப்பப்பட்டனர்.

ஸ்ரீவஸ்தவா என்பவர் கால் மீது கட்டிட இடிபாடுகள் விழுந்திருந்தன. அவரை ரத்த காயங்களுடன் மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்துள்ளனர். அவரது மனைவி கதி என்ன ஆனது என்பது தெரியவில்லை.

இந்த விபத்தில் 2 பேர் பலியாகி இருப்பது தெரிய வந்துள்ளது. தொடர்ந்து மீட்பு பணிகள் நடந்து வருகின்றன. மீட்பு பணியினை விரைவுபடுத்துவதற்காக தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் வரவழைக்கப்பட்டு உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com