டெல்லியில் திருமண பந்தலில் பயங்கர தீ விபத்து

தீயணைப்பு படையினர் தீயணைப்பு வாகனங்களுடன் விரைந்து சென்று தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
டெல்லியில் திருமண பந்தலில் பயங்கர தீ விபத்து
Published on

டெல்லி ரஜோரி பூங்கா பகுதியில் ஒரு திருமணத்திற்காக பிரமாண்ட மான பந்தல் அமைக்கப்பட்டு இருந்தது. இந்த பந்தலில் இன்று அதிகாலை சுமார் 1 மணி அளவில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.

தீ மளமளவென பந்தல் முழுவதும் பரவியது. இது பற்றி அறிந்ததும் தீயணைப்பு படையினர் தீயணைப்பு வாகனங்களுடன் விரைந்து சென்று தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

1 மணி நேரத்துக்கும் மேலாக போராடி அவர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்தில் பந்தல் முழுவதும் சேதம் அடைந்தது. ஆனால் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை. நல்ல வேளையாக நள்ளிரவில் தீப்பிடித்ததால் பெரிய அளவிலான விபத்து தடுக்கப்பட்டது.

இந்நிலையில், தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com