பாத யாத்திரை, கூடுதலாக 4 மணி நேரம் பரப்புரைக்கு அனுமதி - தேர்தல் ஆணையம் அறிவிப்பு

ஐந்து மாநில தேர்தல் பிரச்சாரம் தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையம் கூடுதல் தளர்வுகளை அறிவித்துள்ளது.
தேர்தல் ஆணையம்
தேர்தல் ஆணையம்
Published on

புதுடெல்லி:

உத்தர பிரதேசம், பஞ்சாப், கோவா, மணிப்பூர், உத்தரகாண்ட் ஆகிய 5 மாநில சட்டசபை தேர்தல் இம்மாதம் நடைபெறுகிறது.

உ.பி.யில் 7 கட்டமாகவும், மணிப்பூரில் 2 கட்டமாகவும், உத்தரகண்ட், பஞ்சாப், கோவா ஆகிய மாநிலங்களில் ஒரே கட்டமாகவும் தேர்தல் நடைபெற உள்ளது. உத்தர பிரதேசத்தில் கடந்த 10-ம் தேதி முதற்கட்ட தேர்தல் முடிந்துள்ளது.

மணிப்பூரில் பிப்ரவரி 28-ம் தேதி முதற்கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. உத்தரகண்ட், கோவாவில் ஒரே கட்டமாக பிப்ரவரி 14-ம் தேதியும், பஞ்சாப்பில் பிப்ரவரி 20-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளது.

தேர்தலில் பதிவான வாக்குகள் மார்ச் 10-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன. இதற்காக அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரம் மற்றும் வாக்குசேகரிப்பில் ஈடுபட்டுள்ளன.

கொரோனா 3-வது அலை பரவலால் பிரசாரங்களுக்கு கடும் கட்டுப்பாடுகளை தேர்தல் ஆணையம் விதித்தது. பிப்ரவரி 6-ம் தேதி சில தளர்வுகளை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. 

இந்நிலையில், தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை பரப்புரை மேற்கொள்ளலாம். திறந்தவெளி பிரசாரங்களில் அதிகபட்ச கொள்ளளவில் 50 சதவீதம் வரையிலான நபர்கள் பங்கேற்கலாம். பாத யாத்திரை உள்ளிட்ட நிகழ்ச்சிகளை மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி பெற்று, விதிகளைப் பின்பற்றி நடத்திக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளது. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com