முப்படை தலைமைத் தளபதி பிபின் ராவத் உடலுக்கு தி.மு.க எம்.பி.க்கள் அஞ்சலி

ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத்தின் உடலுக்கு அமைச்சர்கள், பல்வேறு கட்சித் தலைவர்கள், அதிகாரிகள் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
தி.மு.க. எம்.பி.க்கள் கனிமொழி, ஆ.ராசா, கலாநிதி வீராசாமி
தி.மு.க. எம்.பி.க்கள் கனிமொழி, ஆ.ராசா, கலாநிதி வீராசாமி
Published on

தமிழகம், நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே நேற்று முன்தினம் நடந்த ராணுவ ஹெலிகாப்டர்  விபத்தில் முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் உள்பட 13 பேர் உயிரிழந்தனர்.

இவர்களது உடல்கள் நேற்று விமானம் மூலம் டெல்லிக்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கு மத்திய அமைச்சர்கள், முப்படைகளின் தளபதிகள், அதிகாரிகள் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.

பின்னர், பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி ஆகியோரின் உடல் டெல்லியில் உள்ள அவரது வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டு இன்று காலை 11 மணி முதல் மதியம் 2 மணி வரை பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இங்கு பல்வேறு கட்சித் தலைவர்களும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், தி.மு.க எம்.பிக்களான கனிமொழி, ஆ.ராசா, கலாநிதி வீராசாமி ஆகியோர் மறைந்த முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி மதுலிகா ஆகியோர் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

தொடர்ந்து, காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே, முன்னாள் அமைச்சர் ஏ.கே. அந்தோணி, டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி உள்ளிட்டோர் பிபின் ராவத்தின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com