காங்கிரஸ் பேனரை அகற்றிய பெண் கவுன்சிலர் மீது தாக்குதல்

காங்கிரஸ் தலைவர் ஒருவர் வீட்டுக்கு வெளியே அந்த கட்சியின் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காங்கிரஸ் பேனரை அகற்றிய பெண் கவுன்சிலர் மீது தாக்குதல்
Published on

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்தவர் தேதீப்யாராவ். இவர் சந்திரசேகர ராவ் கட்சி மாநகராட்சி கவுன்சிலராக உள்ளார்.

இந்த நிலையில் ஐதராபாத்தில் காங்கிரஸ் தலைவர் ஒருவர் வீட்டுக்கு வெளியே அந்த கட்சியின் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தது. அதனை தேதீப்யா மாநகராட்சி ஊழியர்கள் மூலம் அகற்றினார்.

இதனால் அவரது ஆதரவாளர்களுக்கும் காங்கிரஸ் கட்சியினருக்கும் இடையே திடீரென மோதல் ஏற்பட்டது. அப்போது காரில் ஏறி தேதீப்யா ராவ் செல்ல முயன்றார். பெண்கள் சிலர் அவரை காருக்குள் புகுந்து தாக்கினர்.

இதில் அவர் படுகாயம் அடைந்தார். இது பற்றி தகவல் அறிந்த ஜூப்ளிகில்ஸ் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சமாதானம் செய்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com