மணிப்பூரில் பா.ஜனதா ஆட்சியை பிடிக்கிறது

மணிப்பூரில் பாரதிய ஜனதா 29 தொகுதிகளில் முன்னிலையில் இருந்தது. காங்கிரஸ் கூட்டணி 7 தொகுதிகளில் முன்னிலை வகித்தது.
பாஜக
பாஜக
Published on

மணிப்பூரில் உள்ள 60 சட்டசபை தொகுதிகளுக்கு பிப்ரவரி 28 மற்றும் கடந்த 5-ந்தேதிகளில் 2 கட்டமாக தேர்தல் நடைபெற்றது.

இங்கு பா.ஜனதா மற்றும் காங்கிரஸ் கூட்டணி இடையே நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது. மேலும் தேசிய மக்கள் கட்சி, நாகா மக்கள் முன்னணி, ஐக்கிய ஜனதாதளம் கட்சிகளும் களத்தில் உள்ளன. 265 வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிட்டனர்.

மணிப்பூரில் இன்று காலை 8 மணிக்கு ஓட்டு எண்ணும் பணி தொடங்கியது. 12 மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.

மதியம் 12 மணி நிலவரப்படி பாரதிய ஜனதா 29தொகுதிகளில் முன்னிலையில் இருந்தது. காங்கிரஸ் கூட்டணி 7 தொகுதிகளில் முன்னிலை வகித்தது. மற்றவை 23 இடங்களில் முன்னிலை வகித்தது

மணிப்பூரில் மொத்தம் 60 தொகுதிகள் உள்ளன. அங்கு ஆட்சி அமைக்க 31 தொகுதிகள் தேவை. அதே நேரத்தில் பா.ஜனதா 29 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. பா.ஜனதா ஆட்சியை பிடிக்க 2 தொகுதிகள் தேவைப்படுகிறது. இதன் மூலம் மணிப்பூரில் பா.ஜனதா ஆட்சி அமைக்க வாய்ப்புள்ளது.

கடந்த முறை ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சி பின்னடைவை சந்தித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com