டெல்லி தீ விபத்து: உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.1 கோடி இழப்பீடு- மனோஜ் திவாரி கோரிக்கை

இறந்தவர்களின் குடும்பங்களுக்கு உடனடியாக ரூ.1 கோடி நிதியுதவி வழங்கமுதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உரிய ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என்று எம்.பி மனோஜ் திவாரி தெரிவித்தார்.
பாஜக எம்.பி மனோஜ் திவாரி
பாஜக எம்.பி மனோஜ் திவாரி
Published on

வடகிழக்கு டெல்லி கோகுல்புரி பகுதியில்  உள்ள குடிசைப் பகுதியில் நள்ளிரவு 1 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தூங்கிக் கொண்டிருந்த மக்கள் குடிசை தீப் பற்றி எரிவதை அறிந்து அலரியடித்துக் கொண்டு அங்கிருந்து தப்பிக்க முயன்றனர். அதற்குள் தீ வேகமாக சுமார் 30 குடிசைகளில் தீ பரவியது.

தீ விபத்து சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இரங்கல் தெரிவித்தார்.

இந்நிலையில், கோகுல்புரி தீ விபத்து குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும் என்று வடகிழக்கு டெல்லி நாடாளுமன்ற உறுப்பினர் மனோஜ் திவாரி கோரிக்கைவிடுத்துள்ளார்.

கோகுல்புரி தீ விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுடன் துணையாக நிற்பேன்.

ஒட்டுமொத்த சம்பவத்தின் உணர்திறனை மனதில் கொண்டு தீ விபத்து குறித்து நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும். இறந்தவர்களின் குடும்பங்களுக்கு உடனடியாக ரூ.1 கோடி நிதியுதவி அறிவிக்கப்பட வேண்டும். முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உரிய ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com