இந்தியா கேட்டில் 30 அடி உயர சுபாஷ் சந்திரபோஸ் சிலை

சிலையை அமைப்பதற்காக தெலுங்கானாவில் இருந்து பெரிய கருப்பு ஜேட் கிரானைட் கல் தேர்வு செய்யப்பட்டு டெல்லிக்கு கொண்டு வரப்பட்டு அங்கு பணிகள் நடைபெற உள்ளது.
இந்தியா கேட்
இந்தியா கேட்
Published on

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 125-வது பிறந்தநாளை முன்னிட்டு, சுதந்திரப் போராட்டத்திற்கு அவர் ஆற்றிய பங்களிப்பை கவுரவிக்கும் வகையில் இந்தியா கேட் பகுதியில் அவரது சிலை நிறுவப்படும் என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.

சிலையை அமைப்பதற்காக தெலுங்கானாவில் இருந்து பெரிய கருப்பு ஜேட் கிரானைட் கல் தேர்வு செய்யப்பட்டு டெல்லிக்கு கொண்டு வரப்பட்டு அங்கு பணிகள் நடைபெற உள்ளது.

மைசூருவைச் சேர்ந்த சிற்பி அருண் யோகிராஜ், இந்தியா கேட்டில் உள்ள அமர் ஜவான் ஜோதிக்குப் பின்னால் உள்ள பிரமாண்டமான விதானத்தின் கீழ் நிறுவப்படும் சுவாஷ் சந்திர போஸின் 30 அடி சிலையை செதுக்கவுள்ளார்.

கலாசார அமைச்சகத்தின் கீழ் இயங்கும் நேஷனல் கேலரி ஆப் மாடர்ன் ஆர்ட்டின் இயக்குநர் ஜெனரல் அத்வைதா கடநாயக் தலைமையிலான குழுவால் சிலையின் வடிவமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

நாளை டெல்லி வரும் யோகிராஜ், சிலையின் முக அம்சங்களை செதுக்க தொடங்குவார் என்றும் ஆகஸ்ட் 15-ம் தேதிக்குள் பணிகள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கலாச்சார அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com