பத்ரிநாத் பயணத்தின்போது கார் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்து- 3 பேர் பலி

கட்டுப்பாட்டை இழந்த கார் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.காயமடைந்த 3 பேரை ரிசிகேஷியில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
பத்ரிநாத் பயணத்தின்போது கார் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்து- 3 பேர் பலி
Published on

உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள நியூ டெஹ்ரி பகுதியில் பத்ரிநாத் நோக்கி சென்றுக்கொண்டிருந்தபோது கார் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் மூன்று பேர் பலியாகியுள்ளனர். மேலும், 3 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

மும்பையை சேர்ந்த ஆறு பேர், காரில் பத்ரிநாத் கோயிலுக்கு சென்றுக் கொண்டிருந்தனர். அப்போது, கட்டுப்பாட்டை இழந்த கார் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த மூத்த துணை ஆய்வாளர் ரமேஷ் குமார் சாயினி மற்றும் துணை ஆய்வாளர் ஆஷிஷ் சர்மா ஆகியோருடன் மாநில பேரிடர் மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதில் 3 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டன. காயமடைந்த 3 பேரை ரிசிகேஷியில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com