காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்படனர்.
காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
Published on

ஸ்ரீநகர்:

ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா மாவட்டம் டிரால் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து அங்கு பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தினர். பாதுகாப்பு படையினரும் எதிர் தாக்குதல் நடத்தினார்கள்.

இதில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். அவர்கள் லஷ்கர்-இ- தொய்பா அமைப்பை சேர்ந்த உமர்தசி, அன்சர் கஸ்வத்துல் ஹிந்த் அமைப்பை சேர்ந்த சமீதி முஸ்தபர் என்றும் தெரிய வந்தது. இருவரும், சோன்மோஹ் பஞ்சாயத்து தலைவர் கொலை வழக்கு உள்ளிட்ட பல்வேறு தீவிரவாத வழக்குகளில் தொடர்புடையவர்கள் என்றும் போலீசார் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com