10 சதவீத இட ஒதுக்கீடு வழக்கு கடந்து வந்த பாதை

மேல்முறையீட்டு மனுக்களை விசாரிக்க செப்டம்பர் மாதம் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி யு.யு. லலித் தலைமையில் பெஞ்ச் அமைக்கப்பட்டது.பொருளாதார ரீதியில் நலிவடைந்த உயர் வகுப்பினருக்கான 10 சதவீத இடஒதுக்கீடு செல்லும் என்று 3-2 பெரும்பான்மையுடன் தீர்ப்பு வழங்கப்பட்டது.
10 சதவீத இட ஒதுக்கீடு வழக்கு கடந்து வந்த பாதை
Published on

பொருளாதார ரீதியில் நலிவடைந்த உயர் வகுப்பினருக்கான 10 சதவீத இடஒதுக்கீடு செல்லும் என்றும் சுப்ரீம் கோர்ட்டு இன்று தீர்ப்பு வழங்கியது. இந்த வழக்கு கடந்து வந்த பாதை வருமாறு:-

ஜன-8, 2019: அரசியல் அமைப்பு சட்டத்தின் 103-வது பிரிவில் ஏற்படுத்திய திருத்த மசோதாவுக்கு பாராளுமன்ற மக்களவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

ஜன-9: மேல்சபையில் 103-வது அரசியல் அமைப்பு திருத்த மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

ஜன-12: ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்ததாக சட்ட அமைச்சகம் அறிவித்தது.

பிப்: இந்த புதிய சட்டத்தை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

பிப்-6: மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ் அனுப்பியது.

பிப்-8: 10 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுத்தது.

செப்-8, 2022: மேல்முறையீட்டு மனுக்களை விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி யு.யு. லலித் தலைமையில் பெஞ்ச் அமைக்கப்பட்டது.

செப்-13: சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை தொடங்கியது.

நவ-7: பொருளாதார ரீதியில் நலிவடைந்த உயர் வகுப்பினருக்கான 10 சதவீத இடஒதுக்கீடு செல்லும் என்று 3-2 பெரும்பான்மையுடன் தீர்ப்பு வழங்கப்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com