ராஜஸ்தானில் குழந்தை திருமணம் செய்த நபர் கைது- 5 பேர் மீது வழக்குப்பதிவு

குழந்தை திருமணம் செய்த குற்றத்திற்காக ராம்பூரியா கிராமத்தைச் சேர்ந்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
குழந்தை திருமணம்
குழந்தை திருமணம்
Published on

ராஜஸ்தான் மாநிலம் ஜலாவர் மாவட்டத்தின் மனோஹர்த்தனர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட ரவசியா கிராம பஞ்சாத்தின் சல்யகேடா கிராமத்தில் கடந்த வியாழக்கிழமை குழந்தை திருமணம் நடந்ததாக தகவல் வெளியானது.

மைனர் பெண்ணை ஒருவர் திருமணம் செய்து கொள்ளும் வீடியோ காட்சி சமூக வலைத்தளத்தில் பரவியதை அடுத்து போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தினர். அப்போது, குழந்தை திருமணம் நடைபெற்றது உறுதியானதை அடுத்து போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பாக, குழந்தை திருமணம் செய்த குற்றத்திற்காக ராம்பூரியா கிராமத்தைச் சேர்ந்த நபரை போலீசார் கைது செய்தனர்.

மேலும், 5 பேர் மீது குழந்தைத் திருமணத் தடைச் சட்டம் 2006-ன் பிரிவுகளின் கீழ் நேற்று வழக்குப்பதிவு செய்யப்பட்டதாக மனோஹர்த்தனா காவல் நிலைய அதிகாரி நந்த் சிங் கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com