சீதாராம் யெச்சூரி வீட்டிற்கு சென்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை 11 மணியளவில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார். யெச்சூரியின் குடும்ப உறுப்பினர்களுக்கும் ஆறுதல் கூறினர்.
சீதாராம் யெச்சூரி வீட்டிற்கு சென்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி
Published on

பிரதமர் மோடியை சந்திப்பதற்காக டெல்லி சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை 11 மணியளவில் பிரதமர் நரேந்திர மோடியை அவரது அலுவலகத்தில் சந்தித்தார்.

அப்போது, தமிழ்நாட்டின் நலன் சார்ந்த திட்டங்களுக்கு தேவையான நிதியை ஒதுக்குமாறு வலியுறுத்தினார்.

பிரதமர் மோடியை சந்தித்த பிறகு, முதல்வர் அதைத் தொடர்ந்து மறைந்த சிபிஐ-எம் பொதுச்செயலாளர் யெச்சூரியின் வீட்டிற்கு சென்றார்.

அங்கு சீதாராம் யெச்சூரியின் உருவப்படத்திற்கு, முதலமசை்சர் மு.க. ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார்.

முதல்வரை தொடர்ந்து, அங்கு வைக்கப்பட்டிருந்த திருவுருவப் படத்திற்கு கனிமொழி, டி.ஆர்.பாலு, திருச்சி சிவா ஆகியோர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

இதைத் தொடர்ந்து யெச்சூரியின் குடும்ப உறுப்பினர்களுக்கும் ஆறுதல் கூறினர்.

X

Maalai Malar
www.maalaimalar.com