இரவில் அக்காவிடம் பெட்ஷீட்டுக்காக சண்டை.. காலையில் தங்கை தற்கொலை

ஷ்ரவ்யா என்ற இளம்பெண் (19) தனியார் கல்லூரியில் பிபிஏ 2-ம் ஆண்டு படித்து வருகிறார்.அவரது அக்காவுடன் ஷ்ரவ்யா பெட்ஷீட்டுக்காக சண்டை போட்டுள்ளார்.
இரவில் அக்காவிடம் பெட்ஷீட்டுக்காக சண்டை.. காலையில் தங்கை தற்கொலை
Published on

பெங்களூரு நகரின் சாமராஜ் பேட்டை பகுதியில் அக்காவுடன் பெட்ஷீட்டுக்காக சண்டைபோட்ட தங்கை தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஷ்ரவ்யா என்ற இளம்பெண் (19) தனியார் கல்லூரியில் பிபிஏ 2-ம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த 18 ஆம் தேதி அவரது அக்காவுடன் ஷ்ரவ்யா பெட்ஷீட்டுக்காக சண்டை போட்டுள்ளார்.

நேற்று காலை ஷ்ரவ்யா தனது அறையின் கதவை பூட்டியிருந்ததால் சந்தேகமடைந்த குடும்பத்தினர் கதவை உடைத்து பார்த்துள்ளனர். அப்போது ஷ்ரவ்யா தூக்குப் போட்டு தற்கொலை செய்துள்ளதை பார்த்து குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com