மகாராஷ்டிரா துணை முதல்வராக பதவியேற்றுக் கொண்டார் ஏக்நாத் ஷிண்டே

புதிய அரசு பதவியேற்பதில் இழுபறி நீடித்து வந்தது. மகாராஷ்டிரா ஆளுநர் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
மகாராஷ்டிரா துணை முதல்வராக பதவியேற்றுக் கொண்டார் ஏக்நாத் ஷிண்டே
Published on

மாராஷ்டிராவில் சமீபத்தில் நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்தது. இதைத் தொடர்ந்து முதலமைச்சர் பதவி மற்றும் அமைச்சர்களுக்கான துறைகள் ஒதுக்கீடு விவகாரத்தால் புதிய அரசு பதவியேற்பதில் இழுபறி நீடித்து வந்தது.

இந்த நிலையில், பாஜக பேச்சுவார்த்தைக்குப் பிறகு மும்பையில் நடந்த பாஜக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து தேவேந்திர பட்னாவிஸ் மகாராஷ்டிரா முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்டார். மகாராஷ்டிரா ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் பதவி பிரமாணம் மற்றும் ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார்.

இவரைத் தொடர்ந்து சிவ சேனா கட்சி தலைவர் ஏக்நாத் ஷிண்டே மகாராஷ்டிரா மாநிலத்தின் துணை முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்டார். இவருக்கும் மகாராஷ்டிரா ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் பதவி பிரமாணம் மற்றும் ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார்.

பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா, பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், உத்திர பிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் கலந்து கொண்டனர். 

X

Maalai Malar
www.maalaimalar.com