மும்பையில் பல இடங்களில் குண்டு வெடிக்கும்: மர்ம நபர் மிரட்டலால் பாதுகாப்பு அதிகரிப்பு

போனில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபர் யார்? என்று தெரியவில்லை. வெடிகுண்டு மிரட்டல் விடுக்கபட்டு உள்ளது மும்பையில் பதற்றத்தை அதிகரித்து இருக்கிறது.
மும்பையில் பல இடங்களில் குண்டு வெடிக்கும்: மர்ம நபர் மிரட்டலால் பாதுகாப்பு அதிகரிப்பு
Published on

மும்பை:

மும்பை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று மாலை ஒரு மர்ம போன் வந்தது. அதில் பேசிய மர்ம நபர் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது மும்பை நகரில் பல இடங்களில் குண்டுகள் வெடிக்கும் என்று கூறி விட்டு இணைப்பை துண்டித்துவிட்டான்.

இதையடுத்து போலீசார் உஷார் படுத்தப்பட்டனர். போனில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபர் யார்? என்று தெரியவில்லை. அவனை தேடி கண்டுபிடிக்கும் முயற்சியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். அவன் எங்கிருந்து பேசினான் என்பது தொடர்பாக விசா ரணை நடத்தி வருகின்றனர்.

வெடி குண்டு மிரட்டலை தொடர்ந்து மும்பை நகர் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. முக்கிய இடங்களில் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் தீவிர வாகன சோதனையிலும் ஈடுபட்டு வருகின்றனர். மும்பையை பொறுத்தவரை ஒவ்வொரு ஆண்டும் புத்தாண்டு கொண்டாட்டம், ஆட்டம். பாட்டத்துடன் உற்சாகத்துடன் நடக்கும். இன்று நள்ளிரவில் புத்தாண்டு கொண்டாடப்படுகிறது. இந்த சூழ்நிலையில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கபட்டு உள்ளது மும்பையில் பதற்றத்தை அதிகரித்து இருக்கிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com