கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு

கெஜ்ரிவால் மனு சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கு விசாரணை வருகிற 23-ந் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது.
கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு
Published on

புதுடெல்லி:

டெல்லி அரசின் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் சி.பி.ஐ. கைது செய்ததற்கு எதிராக அம்மாநில முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். அமலாக்கத் துறையால் கைது நடவடிக்கையால் ஜாமின் கிடைத்த நிலையில் திகார் சிறையில் உள்ள அவர் சி.பி.ஐ. கைதுக்கு எதிராக இந்த வழக்கை தொடுத்துள்ளார்.

கெஜ்ரிவால் மனு சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. இது தொடர்பாக சி.பி.ஐ. பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்ப சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்க சுப்ரீம் கோர்ட் மறுத்துவிட்டது. இந்த வழக்கு விசாரணை வருகிற 23-ந் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com